Friday, October 19, 2012

மரம் நட்டு
மதம் வளர்க்கும்
மதங்கொண்ட நாடிது 

Tuesday, October 9, 2012



இல்லாத கடவுளுக்கு கோவிலா ??
தொட்டி மீன் வளர்க்கும்  நாஸ்திகன்!!

Saturday, October 6, 2012


சிறகிருந்தும் குரல் கொண்டே பறந்தாய்
கால் இருந்தும் தலை கீழாயே தொங்கினாய்
மதத்தை விட மரத்தில் தொங்கிய நீ எனக்கு-
"360° பார்வையே"

Sunday, September 9, 2012


கனவு காண வேண்டும் என்பது என்
நீண்ட நாள் கனவு - இது வரை
நானாய் கொண்டதில்லை உறக்கம்
ஒவ்வொரு இரவும் பொய் பசை கொண்டே
ஒட்டி கொள்கின்றன  -இமைகள்

Monday, September 3, 2012

ஓர் எல்லைக்குள் தான் என் பார்வையின் - புலன்
ஓர் எல்லைக்குள் தான் என் செவியின் - புலன்
எல்லை கடந்தால் நானும்-
செவிடனாய்
குருடனாய் 

Wednesday, July 18, 2012

வேண்டுதல்களால் மட்டும்
நிரப்பப்பட்ட கோவில்கள்
வேண்டாம்  என்றே
இவன் தனது
கடவுளை கோவில்களில் இருந்து
வேறிடம் மாற்றிக்கொண்டான்

Wednesday, June 27, 2012

உனக்கு
வரம் தரும் ஒரு
வரம் வேண்டும்
- கடவுளே 

Sunday, June 10, 2012


சமயத்தை வணங்கு
கடவுளை வணங்க முன்!!
என் நாட்டில்
சமயமே
சட்டத்தை போதித்தது
சமயமே நாட்டின்
சாதாரனவனும் அறிந்த முதல்
சட்டம் ஆதலால் ..

Tuesday, June 5, 2012


எந்த தே"வதை"
எனக்கு தூக்கத்தை பரிசளிக்க போகிறது
மரணம் பரிசானால் கூட
அது எனக்கு தூக்கத்தின் வரம் தான்

Tuesday, May 29, 2012

விஞ்ஞான விளக்கம் இல்லா உறவிது
விதிகளுக்கெல்லாம் விதிவிலக்கான உறவிது
விஞ்ஞானதோடு  விதி எழுத முற்பட்டு
வளி  இல்லாமல் ஒலி இழந்து
மொழி இல்லாமல் போன உறவிது
காதல் கொண்டு களங்கப்பட்ட உறவிது
காதல் களங்கம் இல்லாதது எனில்
உன்னை களங்கப்படுத்துவது தவறில்லை 

Sunday, May 20, 2012


கணிதம்
கற்க்க வந்து
கணினிக்குள்
கவிழ்க்கப்பட்டேன்
விழுந்தது ஏதோ
விறைப்பான இடத்தில் தான்
இருந்தும் காலம்
கால்கள் நகரும் திசையில் இல்லை - கால பதில்களுக்கான காத்திருப்புக்களில்....

Sunday, May 13, 2012

விஞ்ஞானம் தொலை தொடர்பை கண்டு பிடித்தது  - இருந்தும்
ஒலி அலையிலே என் உயிர் அலையை கண்டு பிடிப்பவள் - நீயே தான்
தூரத்தில் இருந்தாலும் நீ என் நிழல்
இருளிலும் தெரியும் என் நிழல் - எனக்கு - அம்மா

Wednesday, March 21, 2012

என் கண்களை திறந்து விட்டு நான் காணுமுன் உன் கண்களை மூடி கொண்டாய் சூரியனே இங்கு இல்லை பிறகு இங்கேது பவுர்ணமி

Sunday, March 11, 2012

உன்னோடு பேசுவதாய்
எனக்குள் பேசி, பேசியே!
மெளவுநியானவன்
நீ யார் என்று தெரியாமல் இருந்திருந்தால்
நான் நானாகவே இருந்திருப்பேன்..

Tuesday, February 28, 2012

நான் நடந்திருந்தால் என் சுவடு தெரிந்திருக்கும்.
நான் கதைத்திருந்தால் என் மொழி தெரிந்திருக்கும்.
மெளவுநியாக்கி பறக்க விட்டாய்!
அடையாளத்தோடு, அடையாளப்படுத்த அலைகிறேன்

Thursday, February 9, 2012

உன் ஆசை என் மேல் திணித்தாய்
இதுவே உலகாசை என்றாய்
இப்படியே போனால்
வீட்டுக்கொரு நாடு வேண்டி
ஆயுதம் ஏந்த வேண்டி வரும்

Sunday, February 5, 2012

விலங்கில் இருந்து வந்தானா - இல்லை
விலங்கை விட்டு வந்தானா - விட்டது
விலங்கை மட்டும் அல்ல
வினாகளோடு மீண்டும்
"சுடு" காட்டுக்கே திரும்புகிறான்

Wednesday, January 4, 2012

கரைகிறேனா
உறைகிறேனா - தெரியவில்லை
கரைந்தால் மீள்வது
கடினம்
உறைந்தால்
காலத்திற்காய்
காத்திருப்பேன்