Monday, December 26, 2011

நிலவை வட்டம் என்றார்கள்
பூமியை சதுரம் என்றவர்கள்
பூமியில் நின்றுகொண்டு
புரிந்து கொண்டேன்
எந்த உண்மைக்கும்
தூரம் அதிகம் -----
ஆசைப்பட்டவைகளும் -எதிர்காலம்
அவஸ்தைப்பட்டவைகளும் - நிகழ்காலம்
அதிகமே!
செமித்தவைகளும் - அவமானம்
சிந்தியவைகளும் - கண்ணீர்
அதிகமே!
நான் விரும்பியவர்கள் எல்லாம் என்னை - பைத்தியம் என்றனர்
என்னை விரும் பியவர்கள் எல்லாம் என்னை - புத்திசாலி என்றனர்
கடவுளை தேடிய போது
நீ தூரத்தில் - என்றார்
நான் விரும்பியது ...
எதிர்காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும்
இடைவெளி இல்லா....
சேமிப்பதற்கும் சிந்துவதற்கும்
இடம் இல்லா...
பைத்தியத்திற்கும் அறிவாளிக்கும்
வேறுபாடு இல்லா..
கடவுளுக்கும் மனிதனுக்கும்
வித்தியாசம் இல்லா.....
"மனிதன் ஆசை"ப்படக்கூடாது - என்று
"புத்தன் ஆசை" ப்பட்டான்
(Mod COP)

Tuesday, December 13, 2011

என் வேண்டுதல்கள் புரிந்து கொள்ளப்படுவதே இல்லை
கடவுள் புரிந்து கொள்ளாத ஒரே மொழி - மெளன மொழி

Friday, November 25, 2011


புற்று நோயும் புலம் பெயர்வும் -
புற்று நோய் உடலை அழிக்கிறது,
புலம் பெயர்வு இனத்தை அழிக்கிறது,
"புலன்"கள் தான் பெயர்க்கப்படுகிறது இங்கு..
உணர்வுகளே இல்லாமல் உணர்வுள்ள ஒன்றை தேடி..

Thursday, November 24, 2011

நிலவு தேடி புறப்பட்ட
மேகம் நான் சூரியனே
மழை ஆக்கிவிடாதே என்னை
மழை ஆனாலும்
மண்ணில்
மடிந்து ஆவியாகி
மறு - படியும்
வருவேன்
 -உன்னை தேடி

Wednesday, November 23, 2011

எப்பொழுதெல்லாம்
சுவாசிக்க தோன்றவில்லையோ
அப்பொழுதெல்லாம்
எழுத தோன்றுகிறது

Friday, July 1, 2011

வண்ணத்து பூச்சியை துரத்தும்
குழந்தையின் குதுகலத்தினை 
வண்ணத்து பூச்சி அறிவதில்லை...
சொல்லாத மெளனங்களோடும்
சொன்னாலும் - வளி இருந்தும் ஒலி கடத்தப்பட முடியா தூர இடைவெளிகளோடும் ...
ஆறாம் புலனோடு இல்லாத ஒன்றைத்தேடி
மண்ணை அடையும்முன் உதிர்ந்தும் உயிர் வாழ்கிற பறவையின் சிறகைபோல்
உன்னை துரத்திய குதுகலத்துடன்  இல்லாத ஒன்றை தேடி ....

Friday, June 3, 2011

எப்பொழுதெல்லாம்
கண்கள் காட்ச்சிகளை விட்டு விட்டு ஒளியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
காதுகள் மொழியை விட்டு விட்டு ஒலியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
மூக்கு மணங்களை விட்டு விட்டு வளியை மட்டும் உள்வாங்குகின்றனவோ
எப்பொழுதெல்லாம்
தோல்கள் தட்ப வெப்பத்தை விட்டு விட்டு தொடுதலை மட்டும் உள்வாங்குகின்றனவோ
அப்பொழுதெல்லாம்
ஆறாம் புலனாய் முளைத்துகொள்வாய் ;;;;;;
முன்பு நீ ........... இப்போது கவிதை

Tuesday, May 31, 2011

தேடி தேடி
செமித்தவைகள் எல்லாமே
உன்னை போலவே
தேட முடியாத - படி
தொலைந்து போயின
என்
காதலுக்கு உன்னோடு
காதலா இல்லை ஏக்கத்தோடு
காதலா
ஏங்கி ஏங்கியே முடிகிறது...
விஞ்ஞான உலகம்
இன்னோர் உலகம்
கண்டாலும் என்
காதல் கனவு
வெல்ல போவதில்லை

Thursday, May 5, 2011

கல்லை தான் கடவுள் என்கிறீர்கள்  கடவுளை தான் கல் என்கிறீர்கள் , அவருடையதை அவருக்கே கொடுங்கள் என்று  கடவுள் தான் சொன்னார் கடவுளுடயத்தை கடவுளுக்கே எறிவது குற்றமா  - கடவுளே வந்து நான்தான் கடவுள் என்றால் கல்லால் ஏறியும் கலிகாலம் இது.

Tuesday, April 19, 2011

உன்னை காணும் வரை நான்
சமயங்களுக்காய்
சண்டை பிடித்ததில்லை

Saturday, March 12, 2011

தொலைந்து விடுவதற்காக
தொலைவில் வந்தேன்
காதலும் -
கடவுளும் ஒன்று என தெரியாமல்

Wednesday, March 9, 2011

நான் ஒரு முறை விண்ணப்பித்தர்க்காய்
ஒன்பதாவது முறையும் ....
நீ தண்டனை தராவிட்டாலும்
நான் தேடிக்கொள்ளும்
பரிகாரம்

Wednesday, February 2, 2011

நான் தொலைத்ததும்
நீ தேடியதும்....... ஒன்றைத்தான்

Monday, January 3, 2011

உனக்கு
உணர்வு இல்லை என்று தெரிந்ததால் தான்
மனிதன் உன்னை கல்லில் செதுக்கி வணக்குகிறான் - இறைவா
மனித வாழ்க்கை - கடவுள் காணும் கனவு
கடவுள் தான் பயந்து
மனிதனுக்கு கொடுத்த வரம் ---
மரணம்
கடவுளுக்கு மட்டும் சாகாவரம்
மனிதருக்கு
மறு பிறவியாம் ...
இன்னொரு பிறவி எடுத்தால்
இதயம் - இல்லாமல் பிறக்க வேண்டும்
உணர்வுகளின் வலிகளை
உணராமல் இருக்க