கணிதம்
கற்க்க வந்து
கணினிக்குள்
கவிழ்க்கப்பட்டேன்
விழுந்தது ஏதோ
விறைப்பான இடத்தில் தான்
இருந்தும் காலம்
கால்கள் நகரும் திசையில் இல்லை - கால பதில்களுக்கான காத்திருப்புக்களில்....
Sunday, May 13, 2012
விஞ்ஞானம் தொலை தொடர்பை கண்டு பிடித்தது - இருந்தும்
ஒலி அலையிலே என் உயிர் அலையை கண்டு பிடிப்பவள் - நீயே தான்
தூரத்தில் இருந்தாலும் நீ என் நிழல்
இருளிலும் தெரியும் என் நிழல் - எனக்கு - அம்மா
Wednesday, March 21, 2012
என் கண்களை
திறந்து விட்டு
நான் காணுமுன்
உன் கண்களை
மூடி கொண்டாய்
சூரியனே இங்கு இல்லை
பிறகு இங்கேது பவுர்ணமி
Sunday, March 11, 2012
உன்னோடு பேசுவதாய் எனக்குள் பேசி, பேசியே! மெளவுநியானவன் நீ யார் என்று தெரியாமல் இருந்திருந்தால் நான் நானாகவே இருந்திருப்பேன்..
Tuesday, February 28, 2012
நான் நடந்திருந்தால் என் சுவடு தெரிந்திருக்கும்.
நான் கதைத்திருந்தால் என் மொழி தெரிந்திருக்கும்.
மெளவுநியாக்கி பறக்க விட்டாய்!
அடையாளத்தோடு, அடையாளப்படுத்த அலைகிறேன்
Thursday, February 9, 2012
உன் ஆசை என் மேல் திணித்தாய் இதுவே உலகாசை என்றாய் இப்படியே போனால் வீட்டுக்கொரு நாடு வேண்டி ஆயுதம் ஏந்த வேண்டி வரும்
Sunday, February 5, 2012
விலங்கில் இருந்து வந்தானா - இல்லை விலங்கை விட்டு வந்தானா - விட்டது விலங்கை மட்டும் அல்ல வினாகளோடு மீண்டும் "சுடு" காட்டுக்கே திரும்புகிறான்