Thursday, April 29, 2010

நியூடனின் விதி அது விதியானது
உனக்கும் எனக்கும் எது
விதியோ அதுவே
விதியாகும்

Tuesday, March 30, 2010

இனி நீ
என்னை தேடுவதும்
உன் உடம்பில்
உயிரை தேடுவதும்
ஒன்றுதான்

Tuesday, March 23, 2010

நீ என்னோடு இருந்த வரை
நான் என்னை பற்றி சிந்தித்ததில்லை

Tuesday, March 9, 2010

நான் !
ஒவ்வொரு முறை
விழும் போதும்
உன் படைப்பின் குறைகளையே
உணர்கின்றேன்
உன் படைப்பு
முழுமையாய் இருந்திருந்தால்
நீயே  இங்கு வாழ்ந்திருப்பாய் - இறைவா

Wednesday, March 3, 2010

விண்ணில் இருந்து
வரும் போது ஒன்றாய்த்தான்  வந்தோம்
மண்ணில் விழும்முன் 
இலையில் விழுந்து
இரண்டானோம்
நதியில் காத்திருக்கிறேன்
கடலில் கலக்கும்முன்  ஒன்றாவோம்

Tuesday, February 23, 2010

பக்தர்கள் இல்லாத கோவில்களையே
விரும்புகிறேன்
கடவுளுக்காக அல்ல
அமைதிக்காக‌

Tuesday, February 2, 2010

கனவில் வருவாய் என காத்திருகிறேன் ஆனால் இரவு எனக்கு தூக்கத்தை தர ம(ற)றுக்கிறது.