நீ என்னோடு இருந்த வரை நான் என்னை பற்றி சிந்தித்ததில்லை
Tuesday, March 9, 2010
நான் !
ஒவ்வொரு முறை
விழும் போதும்
உன் படைப்பின் குறைகளையே
உணர்கின்றேன்
உன் படைப்பு
முழுமையாய் இருந்திருந்தால்
நீயே இங்கு வாழ்ந்திருப்பாய் - இறைவா
Wednesday, March 3, 2010
விண்ணில் இருந்து
வரும் போது ஒன்றாய்த்தான் வந்தோம்
மண்ணில் விழும்முன்
இலையில் விழுந்து
இரண்டானோம்
நதியில் காத்திருக்கிறேன்
கடலில் கலக்கும்முன் ஒன்றாவோம்
Tuesday, February 23, 2010
பக்தர்கள் இல்லாத கோவில்களையே
விரும்புகிறேன்
கடவுளுக்காக அல்ல
அமைதிக்காக
Tuesday, February 2, 2010
கனவில் வருவாய் என காத்திருகிறேன் ஆனால் இரவு எனக்கு தூக்கத்தை தர ம(ற)றுக்கிறது.
Monday, January 18, 2010
நீ தரமாட்டாய் என்று தெரிந்தும்
நான் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்
நீ பேச மாட்டாய் என்று தெரிந்தும்
நான் பேசிக்கொண்டே இருக்கின்றேன்
நீ கல் என்று தெரிந்தும்
நான் வணங்கிக்கொண்டே இருக்கின்றேன்
இறைவா நீ கல்லிலும் இருப்பாய் .....
ஓர் இரவில் ஒற்ரை நிறத்துடன் ஓர் வானவில் நான் கண் விழிக்கும் வரை எனக்கு தெரிந்தது