இனி நீ என்னை தேடுவதும் உன் உடம்பில் உயிரை தேடுவதும் ஒன்றுதான்
Tuesday, March 23, 2010
நீ என்னோடு இருந்த வரை நான் என்னை பற்றி சிந்தித்ததில்லை
Tuesday, March 9, 2010
நான் !
ஒவ்வொரு முறை
விழும் போதும்
உன் படைப்பின் குறைகளையே
உணர்கின்றேன்
உன் படைப்பு
முழுமையாய் இருந்திருந்தால்
நீயே இங்கு வாழ்ந்திருப்பாய் - இறைவா
Wednesday, March 3, 2010
விண்ணில் இருந்து
வரும் போது ஒன்றாய்த்தான் வந்தோம்
மண்ணில் விழும்முன்
இலையில் விழுந்து
இரண்டானோம்
நதியில் காத்திருக்கிறேன்
கடலில் கலக்கும்முன் ஒன்றாவோம்