Monday, May 8, 2017

இறகு உதிர்ந்தாலும்
சிறகு கொண்டு
வானம் எய்துவேன் என் நிலவுக்காக  

Friday, November 4, 2016

பரிசுத்த வேதத்தின் பெயரால்
நம் காதலுக்கு சாட்சியம் கோரப்பட்டது 
காதலும் காமமும் கடவுளும் மதமும் போல்
என் தர்க்கம் மதத்தோடு
என் மார்க்கம் காதலோடு     
காதலில் பிறந்தது காமம் எனில்
காமத்தின் ஆயுள் காதலுக்கு பொருந்துமா என்ன?

Thursday, September 22, 2016

புனித இடம் தேடி உயிர் அலைகிறது உடலில்
இல்லை என்ற முடிவுக்கு வர தேவைப்படும் காலம் வாழ்க்கை எனப்படுகிறது 

Monday, September 19, 2016

பிழையான முடிவுகளின் தேடல்களில் வந்த
சரியான முடிவு நீ 

Wednesday, April 8, 2015

எல்லா மழைத்துளியும் மண்ணை தேடிய போது
ஒரு மழைத்துளி மட்டும் என்னை தேடியது