ஒலிக்கு மொழி பெயர்க்கப்படாத மெளனங்கள்
Sunday, December 27, 2009
கனவில் ஒரு நாள்
இறந்து விட்டேன் என் துரதிஷ்ட்டம்
கனவு இறந்ததால்
நான் உயிர்த்துக்கொண்டேன்
Friday, December 18, 2009
கிடைக்காதது கிடைத்தது
கிடைக்குமென்றது மட்டும்
கிடைக்கவேயில்லை.
உன்னோடு பேசியதில்
எனக்குள் மறைக்கப்பட்ட
பக்கங்கள் குறைக்கப்பட்டன
உன்னால்தான் என்ன பயன்
என்னை நீ தொலைத்த பிறகு?
என்னை உறங்க வைத்தது
ஒரு கனவு
என்னை இழுத்துபோகும் ஏதோ ஒன்று
உன்னையும் ஒருநாள் இழுத்து போகலாம் !
கனவு காண தெரியாதவர்களே
உங்களுக்கு ஐயோ கேடு ஏனெனில்
உங்களுக்கு கவிதை வராது!
Thursday, December 17, 2009
மௌன கனவுக்கு யார்தான்
மொழி பெயர்ப்பது
நிலவு வரும் வரை காத்திருந்தேன்
அன்று அமாவாசையென தெரியமல்
தேடாமலே கிடைத்தாய்!
கிடைத்தும் தொலைத்தேன்!
தொலைத்தும் தேடுகிறேன்!
பாதைகளின் வழியே
பாதங்கள் போன போதும்
நிகழ்கால நிமிஷங்கள் கலக்கங்களாகவே
உன்னிடம்
தாய் மொழியில் பேசியதை விட
மெளன மொழியில் பேசியதே அதிகம்
......................... இறைவா
என்னை புரிந்து கொண்ட ஒரே ஜீவன்..
இருளிலும் தெரியும் என் நிழல் _ Acer TravelMate 6291 !
எல்லாவற்றையும்
தூக்கி எறிந்து விட்டு மீண்டும்
உன்னில் இருந்தே தொடங்க வேண்டும்
என்னை
Wednesday, December 16, 2009
உன்னிடம் கேட்பதற்கு
என்னிடம் வார்த்தை இல்லை
உனக்கு தருவதற்கு
என்னிடம் ஒன்றும் இல்லை
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)